உடுப்பி கிருஷ்ணர் கோயில் புதிய மடாதிபதி நாமக்கல்லுக்கு வருகை தந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிரபலமான கிருஷ்ணர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அடுத்த மடாதிபதியாக ஷிரூர் மத்வமடாதீசர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
இதையொட்டி மத்வமடாதீசர் நாமக்கல்லில் உள்ள ராகவேந்திரர் மடத்திற்கு வருகை புரிந்தார். மடத்தில் அவர் ஊஞ்சல் சேவை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மடத்தில் சமஸ்தான பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் ஆசிர்வாதம் வழங்கினார்
பின்னர் அவர் நாமக்கல்லில் உள்ள நாமகிரித் தாயார், நரசிம்ம சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
மத்வ மடாதீசருக்கு திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாமக்கல் மத்வ சேவா சங்க தலைவர் வக்கீல் டி.வி ரகு, செயளாலர் ரகோத்தமன், துனைத் தலைவர் பிரசன்னா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.