Close
பிப்ரவரி 28, 2025 12:43 மணி

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 982.6 டன் நெல் கொள்முதல்: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இந்த ஆண்டு, இதுவரை 201 விவசாயிகளிடம் இருந்து 982.64 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நலன் கருதி பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்படி, நடப்பு 2024-25ம் ஆண்டு கொள்முதல் பருவத்தில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. இதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் தாலுகா, எலந்தகுட்டை மற்றும் கலியனூர் அக்ரஹாரத்தில் கடந்த ஜன. 23ம் தேதி முதல், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

எருமப்பட்டி வட்டாரத்தில் கோணங்கிப்பட்டி கிராமத்தில் கடந்த பிப். 10ம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் செயல்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 201 விவசாயிகளிடமிருந்து 982.640 டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகளின் நெல்லுக்குண்டான தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

எனவே தமிழ்நாடு அரசின் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, விவசாயிகள் தங்களது நெல்லினை இடைத்தரகர் இன்றி, நேரடியாக நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top