Close
பிப்ரவரி 28, 2025 12:30 மணி

நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கோப்பு படம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடப்பு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர்நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்துகொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்த பயன் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top