Close
பிப்ரவரி 28, 2025 3:23 மணி

மனுநீதி நாள் முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்

இந்நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர்.தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:

மனுநீதி நாள் திட்ட முகாமின் முக்கிய நோக்கம் என்னவென்றால் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நேரடியாக அறிந்து கொள்ள செய்து அதன் மூலம் அவர்களைப் பயன் பெற செய்யவேண்டும் என்பதாகும்.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மனுநீதி நாள் சிறப்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வந்தவாசி வட்டம், ஒசூர் ஊராட்சியில் நடைபெறும் மனுநீதி நாள் திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக முதலமைச்சரின் உழவர் பாது காப்பு திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் நலத்துறை சார்பாக நலவாரிய பதிவு சிறப்பு முகாம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற பல்வேறு துறைகளின் சார்பாக மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

பெண்கள் உயா்கல்வி பயில புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கல்விதான் பெண்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும்.

எனவே, பெண்களைப் வைப்பது நமது முக்கிய கடமையாகும். பெண்களுக்கு குறிப்பிட்ட வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும். இதனால் அவா்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் அவர்களின் கல்வியும் பாதிக்கப்படும்.

பெண்கள்தான் முக்கியமாக கல்வி கற்க வேண்டும். கல்விதான் அவர்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு அளிக்கும் பெண்களைப் படிக்க வைப்பது நமது முக்கிய கடமையாகும். அதற்கு பொதுமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும் அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் அனைவரும் அதன் மூலம் பயனடைய வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்

முகாமில், 34 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, 19 பேருக்கு பட்டா மாற்றம், 11 பேருக்கு குடும்ப அட்டை, 46 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை, 16 பேருக்கு வேளாண் கருவிகள் மற்றும் இடுபொருள்கள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 456 பயனாளிகளுக்கு ரூ.1.24 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில், 642 மனுக்கள் பெறப்பட்டதில் 456 மனுக்கள் ஏற்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 101 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 85 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

முகாமில் செய்யாறு சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வந்தவாசி வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top