விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் மதுரை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தஆலோசனைக் கூட்டத்தில், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி காவல் ஆணையர் லோகநாதன், இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் , ஏர் இந்தியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் , மதுரை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாகவும்,மதுரை விமான நிலைய 24 மணி நேர சேவைகளின் இடர்பாடுகள் குறித்தும் விமான போக்குவரத்துகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய முடிவுகளும் எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.