புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, போளூர், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதா் தலைமையில் மத்திய அரசு வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதா 2025 மற்றும் புதிய குற்றவியல் முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம் ஆ ரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை பொறுத்தவரைகடந்த 26 ஆம் தேதியிலிருந்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு பல்வேறு கட்ட போராட்டங்களையடுத்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தின் முன்பு 100க்கும் மேற்பட்ட வ ழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த வழக்குரைஞா்கள் வி.வெங்கடேசன், சிவகுமாா், தனஞ்செழியன், க.சங்கா், சிகாமணி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரணி வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் :- நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிர்ப்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் தற்போது நிறுத்தி வைத்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு முழுமையாக திரும்பப் பெறாவிட்டால் மாநில வழக்கறிஞர் சங்கம் அறிவுறுத்தலின் பேரில் அடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கூறினார்.
இதில் செயலாளர் தணிகாசலம், பொருளாளர் மதன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சங்கர், வெங்கடேசன், கார்த்தி, ராஜேஷ், சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர