திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி பேருந்து திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
அரசாணை எண் 33 உள்(போக்குவரத்து -1) துறை நாள்.23.01.2025-ன் படி மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்ட அரசாணைபொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் 23.01.2025 அன்று வெளியிடப்பட்டது. அனைத்து கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய விரிவான திட்டம் 01.05.2025 முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலிருந்து புதிய வழித்தடங்கள் மொத்தமாக 76 வழித்தடங்கள் கண்டறியப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.3 மற்றும் 6 நாட்கள் முறையே 12.02.2025. 24.02.2025- ல் வெளியிடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.3, நாள்:12.02.2025- ல் திருவண்ணாமலை மாவட்ட அரசிதழில் புதிய வழித்தடங்களுக்கு அனுமதி சீட்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் மற்றும் பழைய மினி பேருந்து திட்டத்திலிருந்து புதிய மினி பேருந்து திட்டத்திற்கு மாறுபவர்கள் இவ்வலுவலகத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2025 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது .
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கிணங்க தற்போது விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 14.03.2025 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே புதிய அனுமதி சீட்டு வேண்டியும் , புதிய திட்டத்திற்கு மாற விரும்பியும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 14.03.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர்/ வட்டார போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் .