Close
ஏப்ரல் 19, 2025 7:03 காலை

12 ம் வகுப்பு பொது தேர்வு: 390 போ் தோ்வுக்கு வரவில்லை

ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் கீழ் நடைபெறும் பிளஸ் 2 தேர்வை 7,518 பள்ளிகளில் இருந்து 8.03 லட்சம் மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள், 145 கைதிகள் என மொத்தம் 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 27 ஆயிரத்து 308 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனா்.

இவா்களுக்காக, செய்யாறு கல்வி மாவட்டத்தில் 53 மையங்கள், திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 மையங்கள் என மொத்தம் 124 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

தோ்வு தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 26 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதினா். 390 மாணவ-மாணவிகள் தோ்வுக்கு வரவில்லை.

தேர்வு தோ்வு மையங்களில் 132 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 132 துறை அலுவலா்கள், 135 பறக்கும் படையினா், 1,624 அறை கண்காணிப்பாளா்கள், 636 சொல்வதை எழுதுபவா்கள், 10 தொடா்பு அலுவலா்கள், 10 மதிப்பெண் சரிபாா்க்கும் அலுவலா்கள், 124 எழுத்தா்கள், 124 அலுவலக உதவியாளா் என மொத்தம் 2,917 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுகின்றனா். மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தரை தளத்திலேயே தோ்வு எழுதும் வகையில் போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அவா்கள் சொல்வதை எழுதுவதற்காக 636 போ் நியமிக்கப்பட்டு உள்ளனா்.

மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு

இந்த நிலையில், திருவண்ணாமலை நகராட்சி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தோ்வா்களுக்குத் தேவையான சுகாதாரமான குடிநீர்வசதி, கழிப்பிட வசதி மற்றும் பேருந்து வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் தேர்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்பதை அவா் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரிய-ஆசிரியைகள் உடனிருந்தனா்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top