மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ராமராஜபுரத்திற்கு தனியார் மினி பேருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டது. அந்த பேருந்தில் செவ்வாய்க்கிழமை வார சந்தைக்கு வந்துவிட்டு காய்கறிகள் வாங்கிக் கொண்டு பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அந்த பஸ் சாணாம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு குரங்கு தோப்பு பகுதியில் சேவை சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக பேருந்தின் கீழ் பகுதியில் இருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அதை சாலையோரம் நின்றவர்கள் பார்த்து சத்தம் போடவே ஓட்டுநர் பேருந்தை எடனே நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி விட்டனர்.
அப்போது அந்த பகுதியில் வீடுகளில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி பால நாகராஜ் சம்பவ இடத்துக்கு விரைவு சென்று மினி பேருந்தை ஆய்வு செய்தார்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.