Close
மார்ச் 10, 2025 1:45 காலை

தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் பிறந்தநாள் அன்று இலக்கிய கருத்தரங்கம்: ஆட்சியர் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்

தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோரின் பிறந்த நாள் அன்று இலக்கிய கருத்தரங்குகள் நடைபெற உள்ளது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

தமிழ்வளர்ச்சித் துறையின் 2021.22ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் பிறந்தநாளன்று உள்ளூர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் 150 இடங்களில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்காக முதுமுனைவர் ஒளவை நடராசன், எழுத்தாளர் சாவி, கவிஞர் தாராபாரதி வாழியூர் வே.இராசவேலன் ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி , தமிழ்த்தொண்டு , தமிழ்மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம் 11.03.2025 அன்று காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் திருவண்ணாமலை மாவட்டத் திலுள்ள எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தமிழறிஞர்கள். அனைவரும் கலந்துகொண்டு தமிழ் இலக்கிய விழாவினைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top