Close
மார்ச் 10, 2025 4:21 காலை

மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் அதிகரிப்பு

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவித்ததை தொடர்ந்து மதுரை – ஹைதராபாத்திற்கு கூடுதல் விமான சேவை துவங்கியுள்ளது.

மதுரையில் இருந்து உள்நாட்டிற்குள் இயக்கப்படும் 17 விமானங்களில் கூடுதலாக தற்போது ஹைதரபாத்திற்கு 18 வது விமான சேவை துவங்கியுள்ளது.

தென் மாவட்டங்களில் முக்கியமான விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையம் நான் ஒன்றுக்கு 20 விமானங்கள் வந்து செல்கிறது அதில் 6000க்கும் மேற்பட்ட பயணிகள் விமானப்பயணம் செய்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனர் சுரேஷ், மதுரை விமான நிலையத்திற்கு 24 மணி நேர சேவை துவக்கத்தை அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் மதுரை டு சென்னை இரவு நேர விமான சேவையாக இரவு 10.40 மணிக்கு தொடங்கியது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் இருந்து 6 30 க்கு புறப்படும் இண்டிகோ விமானம் 8:05க்கு மதுரை விமான நிலையம் வந்து சேரும். மீண்டும் மதுரை விமான நிலையத்திலிருந்து 8:55 க்கு புறப்பட்டு 10:40 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையம் சென்றடையும்.

மதுரையில் இருந்து ஹைதராபாத்துக்கு ஒரு விமான சேவையை இருந்த நிலையில் தற்போது கூடுதலாக விமான சேவை செயல்பட தொடங்கி உள்ளது.

இந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து மதியம் 12:50 மணிக்கு புறப்பட்டு 2:25 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடையும்.

மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 2:55 மணிக்கு புறப்பட்டு 4:30 மணிக்கு ஹைதராபாத்துக்கு மீண்டும் சென்றடையும்.

24 மணி நேரம் சேவை அறிவித்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் விமான எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது .

இந்த நிலையில் 24 மணி நேர சேவை அறிவுப்பை தொடர்ந்து உள்நாட்டு விமான சேவை 16 லிருந்து தற்போது இரண்டு விமானங்கள் கூடுதலாக 18 விமான சேவையாக அதிகரிள்ளது .

மேலும் பயணிகளின் வருகையை தொடர்ந்து கூடுதல் விமான சேவைகள் அதிகரிக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top