மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் வாயிலாக நடத்தப்பட்டு வந்த தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை முகாம் மார்ச் 2-ம் வாரம் முதல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில்
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக பிரதிவாரம் நடத்தப்பட்டு வந்த தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு மருத்துவ முகாம் மார்ச் மாதம் இரண்டாம் வாரம் முதல் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து பிரதிவாரம் வியாழன் கிழமைகளில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வந்த முகாமிற்கு வெகு தொலைவில் இருந்து அதிகபடியான மாற்றுத்திறனாளிகள் வருவதால் அவர்களின் நலன் கருதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று கோட்டம் வாரியாக பிரித்து
- மாதத்தின் இரண்டாம் வியாழன் கிழமை அன்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும்,
- மாதத்தின் மூன்றாம் வியாழன் கிழமை அன்று ஆரணி கோட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு வட்டாச்சியர் அலுவலக வளாகத்திலும்,
- மாதத்தின் நான்காம் வியாழன் கிழமை அன்று செய்யார் கோட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு ஆர். சி.எம் உயர்நிலைப்பள்ளி வளாகத்திலும்
சுழற்சியாக சிறப்பு மருத்துவர்களை கொண்டு தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளது
இம்முகாமில் அந்தந்த கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி நபர்கள் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.