Close
மார்ச் 12, 2025 1:09 காலை

மேட்டுப்புதூர் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா கோலாகலம்

மேட்டுப்புதூர் அரசு தொடக்கபள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஊரட்சி ஒன்றியம், மேட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.

இடைநிலை ஆசிரியை ஆலீஸ்வனிதா வரவேற்றார். ஆசிரியை ராஜாமணி ஆண்டறிக்கை வாசித்தார். தேசிய விருதுபெற்ற முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகாலிங்கம், ஆசிரியர் பயிற்றுனர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினார்கள்.

பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கோமதி, மேலாண்மைக்குழு உறுப்பினர் செந்தில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் மற்றும் திரளான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
பள்ளியில் படிக்கும் 84 மாணவ மாணவிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top