Close
மார்ச் 16, 2025 4:09 காலை

திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்,பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலைக்கு பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள், விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பஞ்சபூத தலங்களில் அக்னிததலமாக கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாதப் பெளா்ணமி 13.03.2024 காலை 11:40 மணிக்கு தொடங்கி 14ம் தேதி பிற்பகல் 12:54  மணிக்கு பௌர்ணமி நிறைவு பெறுகிறது.

சிறப்பு ரயில்

விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதில் 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: பௌவுர்ணமியையொட்டி சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை (மார்ச் 13) 350 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வார இறுதிநாள் விடுமுறையையொட்டி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 14, 15-ம் தேதிகளில் 545 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 51 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 20 பேருந்துகளும் என 616 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top