Close
மார்ச் 17, 2025 11:50 மணி

ஆரணி, சேத்துப்பட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் ஜெயசுதா

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதர், ராகவன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வரகூர் அருணாச்சலம் கலந்து கொண்டு பேசினார்.

தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதாலட்சுமி காந்தன் பேசியதாவது:

234 தொகுதிகளில் போளூர் தொகுதி தான் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. இது 2026ம் ஆண்டு தேர்தலிலும் பிரதிபலிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக திமுகவை வீட்டிற்கு அனுப்பி பழனிச்சாமியை முதல்வராக ஆக்கவேண்டும். இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் திமுக ஆட்சியில் எந்த ஒரு நல திட்டங்களும் வரவில்லை. இதை அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் மக்களிடம் எடுத்து சொல்லி அதிமுக ஆட்சி அமைய பாடுபட வேண்டும். அப்போதுதான் கிராம மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி தர முடியும் என்று அவர் பேசினார்.

ஆரணி

தொடர்ந்து ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நாவல்ப்பக்கம், லாடப்பாடி , கிராமங்களில் வாக்குச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரன் தலைமை வகித்தார் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெகன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட பொறுப்பாளர் வரகூர் அருணாச்சலம் மாவட்ட செயலாளர் ஜெயசுதா ஆகியோ கலந்து கொண்டு வாக்குச்சாவடி குழுவில் நியமனம் செய்யப்பட்ட பொறுப்பாளர்களிடம் கள ஆய்வு மேற்கொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்வன், மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் செம்பியன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செந்தில்குமார், அவைத்தலைவர்கள், துணை செயலாளர்கள் பொருளாளர்கள், மன்ற செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top