Close
மார்ச் 31, 2025 11:08 மணி

பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது: மாநில பொருளாளர் திலகபாமா

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் மாநாட்டின் அழைப்புகளை பொதுமக்களிடம் கொடுப்பதற்காக கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா கட்சியின் நிர்வாகிகளுடன் பொதுமக்களிடம் அழைப்பிதழ்களை வழங்கி ஆதரவு திரட்டினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் தெரிவித்ததாவது:

மே மாதம் 11ம் தேதி சித்திரை முழு நிலவு நாள் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கமும் இணைந்து இளைஞர் பெருவிழாவில் நடத்துகிறது. இன்று நடந்து கொண்டிருக்கின்ற அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்துகின்ற மக்கள் பணியை எல்லா இடத்தில் கொண்டு சேர்க்கவும் இட பங்கீடு குறித்த விழிப்புணர்வை அனைத்து சமூக பொதுமக்களிடம் சேர்க்கும் வகையில் சித்திரை முழுநாள் நிலவு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு பொதுமக்களிடம் அழைப்பு விடுப்பதற்காக தென்காசி மாவட்ட மக்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்துள்ளேன் என்று கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் போதைப் பொருள்களால் மக்கள் சிரமப்பட்டு இருக்கின்றார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் குடி போதைப் பொருள்கள் பயன்பாட்டினால் நடந்துள்ளது. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் செல்கின்றார்கள் ஆனால் மக்களைப் பற்றி இந்த அரசு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை என்றார்.

தொடர்ந்து தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றது, இந்த அரசு அதற்கும் செவி சாய்க்காமல் உள்ளது.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு, கல்விக்கான வாய்ப்பு என்பதற்கு தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இந்த சித்தரை முழு நிலவு மாநாட்டிற்கு அனைத்து சமுதாய மக்களும் வருவதாகவும் தெரிவித்ததோடு இந்த மாநாடு வன்னியருக்கான மாநாடு இல்லாமல் எல்லா சமுதாய மக்களை ஒன்றிணைக்கும் மாநாடாக அமையும் என்றார்.

தமிழக அரசு திட்டங்கள் உருவாக்குவதில் செயல்படாமல் பர்சென்டேஜ் திட்டங்களுக்காக செயல்படுகிறது. தென்மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களை ஒதுக்கவில்லை.  சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை கூட பேசமுடியவில்லை.

தமிழக அரசு இலவச திட்டங்களை மட்டுமே அறிவிக்கின்றார்கள். அதை விடுத்து புதிய தொழிற்சாலை உருவாக்குவது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எந்த ஒரு புதிய திட்டங்களை உருவாக்க முன்வரவில்லை.

தமிழகத்தில் கஞ்சா போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அண்டை மாநிலமான கேரளாவிற்கு இங்கு இருந்து கனிம வளங்களை அதிக அளவில் ஏற்றி செல்கின்றனர். ஆனால் அங்கு இருந்து ஒரு பிடி மண்ணைக் கூட கொண்டு வர முடியாது, அதற்கு மாறாக கேரள கழிவுகளை இங்கு வந்து கொட்டுகின்றார்கள் என வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் சினிமாவில் மட்டும் பேசியவர், தற்போது மக்கள் குறைகளை பற்றி பேசி இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் மட்டும்தான் களத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

பட்டாளி மக்கள் கட்சி பாத்திராத களமா விஜய் பார்த்து இருக்கிறார்?  பாட்டாளி மக்கள் கட்சி தான் களத்தில் இருக்கிறது என நாங்கள் கூறுவோம். 2026 தேர்தலில் மக்கள் போடுகின்ற ஓட்டு தான் தீர்மானிக்கும் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சீதாராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் தொடர்ந்து கடையநல்லூர் மணிகூண்டு, பேருந்து நிலையம் கிருஷ்ணாபுரம், காசிதர்மம், இடைகால், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் மாநாட்டு அழைப்புகளை வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top