Close
ஏப்ரல் 1, 2025 5:06 காலை

மதுரையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் துகளாக்கும் இயந்திரம்: மேயர் இந்திராணி பொன் வசந்த் துவக்கி வைத்தார்

சுற்றுச்சூழலை மாசு படுத்தும் பல்வேறு காரணிகளில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக் பொருட்களாகும். தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பாலிதீன் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மதுரை மாநகரை தூய்மை நகராக்கும் முயற்சியில் முத்தூட் நிதி நிறுவனத்தின் சமூக பொறுப்புத் திட்ட மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக சுகாதார மேம்பாடு, கல்வி மற்றும் சுற்றுசூழல் மேம்பாடிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி முத்தூட் நிதி நிறுவன சமூக பொறுப்பு திட்டம் மூலம் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை துகளாக்கும் இயந்திரம் ரூ.3,06,800 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு அதன் துவக்க விழா நடந்தது.

இந்த விழாவிற்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.மாநகராட்சி துணை ஆணையாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இதில் மாநகராட்சி 75வது வார்டு மண்டல தலைவர் பாண்டி செல்வி, 76 வது வார்டு உறுப்பினர் கார்த்திக், முத்தூட் நிதி நிறுவன மதுரை மண்டல மேலாளர் அருண்குமார், சமூகப் பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார், மார்கெட்டிங் மேலாளர் முருகானந்தம், ரத்னகுமார், மண்டலம் 3 சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், யாழினி பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா தேவி, டபிள்யூ டு டபிள்யூ எண்டர்பிரைசஸ் தனலட்சுமி, திடீர் நகர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரன், முத்தூட் கிளை மேலாளர்கள், கார்த்திக், ரமேஷ், சுந்தரவள்ளி உள்பட மாணவர்கள் பொது மக்கள் பல கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top