Close
மே 3, 2025 1:26 காலை

பஹல்காம் தாக்குதல் காரணமாக போர் பதற்றத்தை பாஜக அரசு உருவாக்க கூடாது: தொல் திருமாவளவன்

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

அம்பேத்கர் அவருடைய நினைவை போற்றும் வகையில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவில் தொழிலாளர்களுக்கான 28 சட்டங்களை பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தவர்.

இந்த நாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் நினைவு கூர்ந்து அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நன்றி செலுத்துகிறது.

உலகத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்து இருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பது அறிவிக்கப்படவில்லை

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற பாஜக அரசு 2029 தனது பதவி காலத்தை நிறைவு செய்கிறது . ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2031 ல் தான் நடைபெறும் என்ற நிலையில் இருக்கிறது .

2021லே நடந்திருக்க வேண்டும் ஆகவே அடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் என்றால் 2031 தான் அந்த காலக்கெடு வருகிறது 2031 பிஜேபி ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

2029 பொதுத்தேர்தலுக்கு பிறகுதான் அது உறுதியாகும். குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி , சாதி வாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன .

இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை அமைச்சரவையின் மூலம் பாஜக அரசு அறிவித்திருக்கிறது என்றாலும் கூட, ஏற்கனவே இது குறித்த அவர்கள் எதிர் நிலைப்பாட்டை கொண்டு இருந்த நிலையில் இப்போது நம்முடைய நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி அடைகிறோம் வரவேற்கிறோம்.

தமிழ்நாட்டைச் சார்ந்த சில கட்சிகள் மாநில அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரசமைப்புச் சட்டத்தின்படி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கீடு நடத்துகிற அதிகாரம் இந்திய அரசுக்கு தான் இருக்கிறது என்பதை விடுதலைச் சிறுத்தை கட்சி அவ்வப்போது சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. மத்திய அமைச்சர் அஸ்வினி ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து கூறி வருகிறார்.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் முப்பத்தி ஒன்றாம் தேதி மதசார்பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற பாஜக அரசை கண்டித்து வக்பு திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் திருச்சிராப்பள்ளியில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கில் சிறுத்தைகள் பேரணியில் பங்கேற்றார்கள்.

பஹல்காம் பகுதியிலே நடைபெற்ற பயங்கரவாத படுகொலை மிகுந்த துயரத்தை அளிக்கிறது. நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு விரைந்து நாடு விரும்பியவர் டெல்லிக்கு வந்து அமைச்சர்களோடு கலந்த ஆய்வு செய்துவிட்டு நேரடியாக பிஹாருக்கு சென்று விட்டார் என்பது வருத்தமளிக்கிறது.
பஹல்லா மில் அங்கே நடந்த பயங்கரவாத படுகொலை யாராலும் நியாயப்படுத்த முடியாது வன்மையாக கண்டிக்கிறோம். அதன் பின்னணியை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .

ஆனால் அதை காரணம் காட்டி நாட்டில் ஒரு பதற்றத்தை பாஜகவினர் உருவாக்கி வருகின்றனர். பாஜக அரசும் பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் சிந்து நதியை பாகிஸ்தான் பயன்பாட்டுக்கு விடமாட்டோம் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்று சொல்லுகிறார்.

பாகிஸ்தானுடைய அமைச்சர் ஒருவர் சிந்து நதி பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டால் நாங்கள் இந்தியா மீது போர் தொடுப்போம் அணு ஆயுதங்கள் தயாராக இருக்கின்றன என்று சொல்லக்கூடிய ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.

பயங்கரவாதத்தை யார் தூண்டினாலும் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விட யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு போர் தேவையா என்பதை அதற்கான சூழலை உருவாக்க வேண்டுமா என்பதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்ய கூட ஊடகவியலாளர்கள் நுழைய தடை குறித்த கேள்விக்கு,  ஊடகவியலாளர்களின் உரிமையை பறிக்காமல் வழக்கம்போல் அவர்களை அனுமதிக்க வேண்டும் சித்திரை திருவிழா முன்னிட்டு ஊடகவியலாளர்களுக்கு உரிய வசதிகளையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி வேண்டுகோள் விடுத்தது

செய்தியாளர் ஊடகவியலாளர்களுக்கான அவர்களுக்கான உரிமைகளை அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஊடகவியலாளர்கள் அவமதிக்கும் கலந்து கொள்வது கூடாது என்று வேண்டுகோள் விடுகிறோம் என்று கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top