திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பல்வேறு மாநிலங்கள் மற்றும் பாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். சித்திரை மாதத்தில் வருகின்ற பெளர்ணமி மிகவும் விசேஷமாக அமைந்த்திருப்பதால் அன்றைய தினம் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிந்து கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்திரை பௌா்ணமி விழா மே 11-ஆம் தேதி இரவு 8.53 மணிக்குத் தொடங்கி மே 12-ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த வருடமும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடர்ந்து அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தியும், நேரில் சென்று ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்,தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள், கிரிவலப்பாதை, கடைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா நுழைவு வாயில், பஞ்சமுக தரிசன இடத்தையும், இடுக்கு பிள்ளையார் கோயில் அருகிலும் ஏற்படக்கூடிய கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், குடிநீர் வழங்குவதற்கு ஏற்ற புதிய 5 ஆழ்துளை கிணறு களை ஆய்வு மேற்கொண்டார்.
தொடரந்து, கிரிவலப்பாதையில் உள்ள கழிவறைகளையும், கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் காலாவதி நாள் மற்றும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார் .
மேலும் ஆட்டோக்களில் க்யுஆர் கோடு ஒட்டப்பட்ட விவரங்களையும் , பொதுமக்களிடம் வசூலிக்கும் கட்டண முறைகள் குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ராஜராஜேஸ்வரி கோயில் அருகில் உள்ள மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிக்கப்படுவது மற்றும் நீர் மேலாண்மை குறித்தும் கேட்டறிந்து, திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் திருமஞ்சன கோபுரம் ஆகிய பகுதிகளில் உ ள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் மின்விளக்குகள் அமைக்கும் பகுதிகள், வாகனம் நிறுத்தும் இடங்கள், தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, காவல் கண்காணிப்பாளா் சுதாகா், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், திருவண்ணாமலை உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ், வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி , வட்டாட்சியர் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.