Close
மே 12, 2025 10:40 மணி

சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் நீரில் மூழ்கி பிளஸ் ஒன் மாணவன் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது

சோழவந்தானில் கள்ளழகர் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்குவதால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரே நேரத்தில் திரண்டனர்.

இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் நெரிசல் ஏற்பட்டது. மேலும் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பிளஸ் ஒன் படிக்கும் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கினர்

அதில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை பிளஸ் ஒன் மாணவன் வசீகரன் உயிரிழந்த நிலையில் சோழவந்தானைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவன் அய்யனார் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

திருவிழாவின் போது பிளஸ் ஒன் மாணவன் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top