பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சேவை புரிந்த தனிநபர் சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
2025-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவை புரிந்தவருக்கு தமிழக முதல்வரால் சிறந்த சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட உள்ளது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்தசேவை புரிந்த தனிநபர் எவரேனும் இருந்தால் இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்,
மேலும் தாங்கள் புரிந்த சிறந்த சேவைக்கான உரிய ஆவணங்கள் மற்றும் சுயவிவரத்துடன் கருத்துருவினை மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2வது தளம் வேங்கிக்கால் திருண்ணாமலை என்ற முகவரியில் 12.06.2025 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துரு அனுப்புவதற்கான விதிமுறைகள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும் குறைந்தது 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொண்டு இருத்தல் வேண்டும்,
மொழி இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.