Close
மே 29, 2025 4:21 காலை

நாமக்கல் முல்லை நகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழா கோலாகலம்

ஸ்ரீ செல்வகணபதி மற்றும் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

நாமக்கல் முல்லைநகர் ஸ்ரீ செல்வகணபதி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் முல்லை நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, முல்லை நகர், அன்பு நகர், பாரதி நகருக்கு பாத்தியப்பட்ட செல்வகணபதி ஆலயம் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ முருகன் மற்றும் நவகிரகங்கள் ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளன.

செல்வகணபதி ஆலயத்தின் 24வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று காலை 7.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், செல்வகணபதி மற்றும் துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6.30 மணிக்கு செல்வகணபதிக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top