Close
மே 29, 2025 2:19 காலை

வாடிப்பட்டியில் மாநில ஆக்கிப்போட்டி: ஜி.கே மோட்டார் அணி சாம்பியன்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாய் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கே.வி.முனியாண்டி சேர்வை நினைவு கோப்பை ஆடவர் மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது.

இந்த போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில் மதுரை ஜி.கே மோட்டார்ஸ் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பெற்றது. மதுரை ரிசர்வ் லைன் அணி இரண்டாம் இடம் பெற்றது. 3:2 என்ற கோல் கணக்கில் திருநகர் ஆக்கி கிளப் அணி மூன்றாம் இடமும், விருதுநகர் ரெட் ரோஸ் அணி நான்காம் இடமும் பெற்றது.

இதன் பரிசளிப்பு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார். தொழிலதிபர் பால.ராஜேந்திரன், தாய் பள்ளி நிறுவனர் எஸ்வி காந்தி, மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். இந்த விழாவில் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஏ ஜி கண்ணன், செயலாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதன் ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி சங்க நிர்வாகிகள் சரவணன், வெள்ளைச்சாமி, ரமேஷ், நாகேந்திரன், காளிதாஸ், சந்திரமோகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

முடிவில் சங்கத் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி. ராஜா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top