Close
ஜூன் 5, 2025 4:13 மணி

காஞ்சிபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஆட்டோ சங்க தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு முறை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் மிகப் பழமையான ஆட்டோ ஓட்டுனர் சங்கம் செயல்பட்டு வருகிறது, இதில் 57 ஆட்டோ ஓட்டுநர்கள் உறுப்பினராக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சங்கத்தின் மூலமாக பொதுமக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்துள்ளனர், பல ஆண்டுகளாக இந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கத்திற்கு முறையாக தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு போட்டி இல்லாமல் காலியாக இருந்து வந்த நிலையில் 2025-2026 ஆம் ஆண்டு முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டு மூலம் தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் போல் சட்டமன்றம் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது போன்று ஆட்டோ ஓட்டுநர் நல சங்கத்திற்கு தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் மற்றும் துணை செயலாளர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு பயன்படுத்தி தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் ஆணையராக சங்கத்தின் கௌரவ தலைவர் வழக்குரைஞர் காஞ்சீ ஜி.வி.மதியழகன் தலைமையில், தேர்தல் ஆணையர்களாக மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் செவிலிமேடு எஸ். மோகன், விநாயகம், சுகுமார், எம்.பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு என பிரத்யேகமாக புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டுகளை வாக்காளர்கள் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வாக்கு செலுத்தினர்.

அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட பெட்டியை திறந்து வாக்குச்சீட்டுகளை எண்ணி அதிக வாக்கு பெற்றவர்களை அறிவித்து நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தனர்.

சங்க தலைவராக போட்டியிட்ட புலிகேசி என்பவரை விட ஒரு ஓட்டு வித்தியாசத்தில் குணாளன் வெற்றி பெற்றார், செயலாளர் பதவிக்கு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இயேசுராஜ் என்பவர் வெற்றி பெற்றார்

தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் குணாளன், செயலாளர் இயேசுராஜ், பொருளாளர் ராஜ், துணைத் தலைவர்கள் முருகேசன், ராபர்ட், துணை செயலாளர் அஜித்குமார், ராஜ்குமார், ஆகிய 7 பதவிக்கு வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவ தலைவர் வழக்குரைஞர் காஞ்சீ ஜீ வி மதியழகன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top