Close
ஜூன் 11, 2025 5:45 காலை

இன்று மாலை நாமக்கல் கிழக்கு மாட்ட திமுக செயற்குழு கூட்டம்: ராஜேஷ்குமார் எம்.பி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், இன்று 10ம் தேதி செவ்வாய்க்கிழமை, மாலை 4 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

கூட்டத்தில், கடந்த 7ம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் தொகுதிப் பார்வையாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்யப்படும்.

பூத் வாரியாக பூத் டிஜிட்டல் ஏஜன்ட் (ஒருங்கிணைப்பாளர்கள்) நியமிப்பது குறித்தும், ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து வாரியாக கிளை, வார்டுகளில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும், கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

கூட்டத்தில், தொகுதிப் பார்வையாளர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top