Close
ஜூன் 18, 2025 1:57 காலை

ஜல்லி, எம்.சேண்ட் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியம்

ஜல்லி, எம்.சேண்ட் உள்ளிட்ட கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற வேண்டும். இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்று இயங்கி வரும் சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல வழித்தடச் சான்றுகள் அனைத்தும் கடந்த ஏப். 15 முதல் வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்டு இ-பர்மிட் எனப்படும் நடைச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஏப். 21 முதல் கிரஷர் மற்றும் குவாரி குத்தகை லைசென்ஸ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மாவட்டத்திலுள்ள கிரஷர் யூனிட்டுகள் மற்றும் குடோன்களில் இருந்து சாதாரண வகை கற்கள், ஜல்லி, எம்.சேண்ட், பி.சேண்ட் ஆகியவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்ல டிரான்சிட் பாஸ் எனப்படும் கனிம நடைச்சீட்டு பெற வேண்டும்.

கனிம ஸ்டாக் குடோன்களில் ஜல்லி, எம்.சேண்ட், பி.சேண்ட் ஆகியவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்ல கடந்த 14ம் தேதி முதல் டிரான்சிட் பாஸ் எனப்படும் கனிம கடவுச்சீட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே (இ-டிரான்சிட் பாஸ்) பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த பாஸ் பெற, mimas.tn.gov.in என்ற வெப்சைட் முகவரி மூலம் மட்டுமே, பதிவு சான்று பெற்ற அனைத்து கிரஷர், குவாரி, குடோன் உரிமையாளர்களும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top