Close
நவம்பர் 22, 2024 11:13 காலை

கோபி நகராட்சியில் பலகாரக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை

ஈரோடு

கோபி நகராட்சியில் பலகார கடை உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கோபி நகராட்சியில் பலகார கடை உரிமையாளர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கோபி நகராட்சியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் உரிமை யாளர்கள் எவ்வாறு சுகாதார முறையில் பலகாரம் தயாரிக்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், உணவு பொருட்களில் எந்தவித கலப்படமின்றியும், பயன்படுத்திய எண்ணெய் வகைகளை திரும்ப பயன்படுத்தக் கூடாது. தரமான மூலப் பொருட்களை கொண்டுதான்  பலகாரங்கள் இனிப்பு வகைகளை   தயாரிக்க வேண்டும். நகராட்சியிலும், உணவு பாதுகாப்பு துறையிலும் உரிய அனுமதி  பெற்று பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நகரமன்ற தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். அவருடன் நகராட்சி ஆணையாளர் சசிகலா, உணவு பாதுகாப்பு அலுவலர் குழந்தைசாமி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் மற்றும் அலுவலர்கள், கடைகாரர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top