திருமயம் ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக திருமயம் வட்டார இயக்கம், மேலாண்மை அலகில் ஊட்டச்சத்து உணவு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் சர்மிளா தலைமை வகித்தார் . வட்டார இயக்க மேலாளர் ஜான்சி, திருமயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சங்கர், நளினி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஊராட்சி ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளின் சுய உதவி குழு பெண்கள் பங்கேற்புடன் பாரம்பரிய சத்து மிக்க நவதானிய, சிறுதானிய ஊட்டச்சத்து மிக்க கீரைகள் மூலிகை தாவரங்கள் கொண்டு இயற்கை முறையில் உணவு தயாரிக்கப்பட்டது.
உணவு திருவிழாவில் குறைபாடு இல்லாமல் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும் வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோர் ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இறுதியில் சிறப்பாக உணவு தயாரித்த ஊராட்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எம். சிக்கந்தர், எம். சிவராமன், தலைமையாசிரியர் மேரி, வட்டார ஒருங்கிணைப் பாளர் கள் சுய உதவி குழுக்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமாக கலந்து கொண்டனர்.