Close
மே 11, 2024 10:40 மணி

திருமயத்தில் பொதுமக்களுக்கு ஆரோக்கிய மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை

திருமயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த ஆரோக்கிய மேம்பாட்டு முகாம்

திருமயத்தில் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மேம்பாடு முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் போர்ட் ரோட்டரி சங்கம், திருமயம் மனவளக்கலை மன்றம் சார்பில் ஒருங்கிணைந்த ஆரோக்கிய மேம்பாடு முகாம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.  திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

கருப்பையா, போர்ட் ரோட்டரி சங்க பொருளாளர் பால்ராஜ், செயல் அறங்காவலர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உடல் நலம் குறித்த ஆலோசனைகளை உளவியல் ஆலோசகர் குணசீலன், யோகா பயிற்றுனர்கள் குருமூர்த்தி, சேதுராமன், நாகலட்சுமி, சிவகாமி, உணவியல் நிபுணர் யுகசரண் ஆகியோர் வழங்கினர்.

இடுப்பு, கழுத்து, மூட்டு, முதுகு, நரம்பு, தசைப்பிடிப்பு சுகர், பிரஷர், மாதவிடாய் உள்ளிட்ட மனித உடலின் அனைத்து பிரச்சனைகளுக்கும் யோகா மூலம் நிரந்தர தீர்வு காண முடியும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் நோய்களின் தன்மைக்கு ஏற்ப எளிய முறையில் யோகா, தியானம், காயகல்பம், அக்குபிரஷர், யோக முத்திரைகள் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடல் வலி நிவாரண தைலம் வழங்கப்பட்டது.

மேலும் தகவல்களுக்கு திருமயம் படித்துறை பகுதியில் உள்ள அறிவு திருக்கோயிலில் இலவச ஆலோசனை பயிற்சி பெறலாம் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top