Close
மே 16, 2024 12:41 காலை

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ 22 வரை காலக்கெடு நீட்டிப்பு

புதுக்கோட்டை

பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு நீட்டிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24 -ஆம் ஆண்டு சம்பா நெல் (சிறப்பு) பருவ பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22 -ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில் 2023-24 -ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்(PMFBY) சம்பா (சிறப்பு) பருவத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்கோ டோக்கியோ பொதுகாப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் பயிர் காப்பீடு செய்ய ஒன்றிய அரசால் கால நீட்டிப்பு செய்யப்பட் டுள்ளது.

அதன்படி, 2023 இம்மாதம் (நவம்பர்) 22 தேதிக்குள் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். இதற்கு பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 513 செலுத்தினால் போதுமானது. எனவே இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே. சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ      (இ- சேவை மையங்கள்) காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம். பதிவு விண்ணப்பம்,

கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு 1433 பசலிக்கான அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்று கொள்ளலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரி (www.pmfby.gov.in) அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளையோ. பொது சேவை மையங்க ளையோ  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங் களையோ அணுகி பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளர்.

மேலும் சனிக்கிழமை 18.11.2023 மற்றும் ஞாயிறு 19.11.2023 ஆகிய தினங்களில் பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை செயல்படுவதால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விரைந்து பயிர் காப்பீடு பதிவு மேற் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top