Close
அக்டோபர் 5, 2024 7:35 மணி

உலக பாரம்பரிய வாரம்… தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் உலக பாரம் பரிய வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அரண்மனைவளாகம் வரை  நடைபெற்ற பாரம்பரிய விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  கொடியசைத்து தொடக்கிவைத்தார்.

தஞ்சாவூர் சுற்றுலாவளர்ச்சிகுழுமம் சார்பில் உலகபாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவிலிலிருந்து அரண்மனை வளாகம் வரை பாரம்பரிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம், சாஸ்திர நிகர் நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் புனிதவளனார் பொறியியல் கல்லூரியை சார்ந்த 200 மாணவ மாணவிகள் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி பங்கேற்றனர். தொடர்ந்து,  தஞ்சாவூர் சங்கீதமஹாலில் நடைபெற்றுவரும் தமிழக நடுக்கல் மரபு கண்காட்சியை பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் பாரம்பரியம் என்றதலைப்பில் சரஸ்வதிமகால் நூலகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ்,போக்குவரத்துகாவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர்  முத்துக்குமார், இந்திய மருத்துவ கழக துணை தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top