Close
டிசம்பர் 12, 2024 2:42 மணி

வங்காளத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து மதுரையில் போராட்டம்; 400 க்கும் மேற்பட்டோர் கைது

வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, வங்காள தேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.

அதன் ஒரு பகுதியாக, மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வங்கதேச இந்துக்கள் உரிமை மீட்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் ராஜேஷ் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பூஜனிய சுவாமிகள் வேதாந்தானந்தா, பிரம்மானந்த ஜி மகாராஜ், ஜிதேஷ் சைதன்ய மகாராஜ் மற்றும் ஆன்மீக இயக்கங்கள், ஆர். எஸ்.எஸ், அனைத்து இந்து இயக்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கோச்சா பெருமாள், மாவட்ட மக்கள் சேவை அமைப்பு சாரா கிழக்கு மாவட்டத் தலைவர் கே.என்.ஆதிகணேசன், ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 400 க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து, பேருந்தில் அழைத்துச் சென்று மண்டபத்தில் அடைத்து மாலையில் அவர்களை விடுவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top