Close
ஏப்ரல் 2, 2025 11:50 காலை

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் பிப்.7 -க்கும் வருமான அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை ஓய்வூதியர்கள்

புதுக்கோட்டை ஒய்வூதியர்களுக்கான கருவூல அலுவலர் அறிவிப்பு

கருவூலம் மூலம் ரூ.45,833 அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெறுவோர் வருமான வரி அறிக்கையினை 07.02.2022 -க்குள் சமர்ப்பிக்க வேண்டுமெ மாவட்ட கருவூல அலுவலர் ஜி.பாபு  தகவல் வெளியிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவூலத்தின் வழியாக ஓய்வூதியம் பெற்று வருகின்ற ஓய்வூதியர்கள் தங்களது மாத ஓய்வூதியம் ரூ.45,833 – அல்லது அதற்கு அதிகமாக ஓய்வூதியம் பெற்று வருகின்ற ஓய்வூதியர்கள் 2021-2022- ஆம் நிதியாண்டிற்கான வருமானவரி அறிக்கையினை ஓய்வூதியம் பெற்று வருகின்ற மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் 7.2.2022 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

மேலும் மார்ச் 2021 முதல் ஜனவரி 2022 வரை உள்ள காலத்தில் ஓய்வூதியம் எவ்வளவு பெறப்பட்டது என்பதை அறிய http://karuvoolam.tn.gov.in  என்ற இணையதளத்தில் pensioner portal என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதற்காக கருவூலம் சென்று ஓய்வூதிய விவரங்களைப் பெறவேண்டியதில்லை எனவும் மாவட்ட கருவூல அலுவலர்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top