Close
நவம்பர் 22, 2024 9:05 காலை

ரூ.1.30 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தல்:  இருவர் கைது; கார் பறிமுதல்

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  குறிப்பாக கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பல பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் என பலர் குற்றம்சாட்டி வந்த நிலையில்,  காவல்துறை சார்பில் தொடர் ஆய்வு மேற்கொண்டு விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.

மேலும் தொழிற்சாலை அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் முதலீட்ட பகுதிகளில் வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் கடந்த ஒரு மாத காலமாக கிராமங்கள் தோறும் உள்ள பல சரக்கு மளிகை கடை மற்றும் டீ கடைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லையான சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொண்ணியம்பட்டறை பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனையிலும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், நேற்று பெங்களூரில் இருந்து டாட்டா சொகுசு காரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் பயணித்து வந்தபோது சோதனை சாவடியில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அவ் வாகனத்தை சோதனை இட்டனர்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்த போதுஅப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான விமல் , கூல்லிப் , ஆன்ஸ் உள்ளிட்ட சுமார் 149 கிலோ எடையுள்ள பொருட்கள் இருந்தது.

இதுகுறித்து அவர்களிடம் மேல்விசாரணைக்காக காஞ்சிபுரம் பாலு செட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து பேரில் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதியில் விற்பனை செய்ய திட்டமிட்டுவதாக தெரிவித்தார்கள்.

இதன் பேரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாந்திலால், அகமது சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாட்டா சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது . பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ 1.34 லட்சம் என தெரிய வந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top