இந்திய ரெட்கிராஸ் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராக புதுக்கோட்டையின் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும் சர்வசித் அறக்கட்டளை அறங்காவலருமான மருத்துவர் ச.ராம்தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு இந்தப் பதவியில் அறமனச்செம்மல் பேக்கரி மஹராஜ் சீனு. சின்னப்பா பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், நீண்ட காலமாக ரெட்கிராஸ் இயக்கத்தில் பணியாற்றியவரும் துணைத்தலைவராக பொறுப்பு வகித்த மருத்துவர் எஸ். ராமதாஸ் தற்போது தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்
செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர் ராமதாசுக்கு, புதுக்கோட்டை மாவட்ட ரெட்கிராஸ் சங்க கெளரவ செயலாளர் ஜெ.ராஜாமுகமது, இணைச் செயலாளர் சா.விஸ்வநாதன், லெனா சொக்கலிங்கம், லதா உத்தமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.