Close
மே 20, 2024 8:14 மணி

சுற்றுச்சூழல்- சமூக சேவையாளர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் விருது

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சுற்றுச்சூழல்- சமூகசேவைக்கான விருதை மருத்துவர் எஸ்.ராம்தாஸ் அவர்களுக்கு "கொரானா வாரியர்"(Corona Warrior) விருதும், பல்கலைக்கழகமகளீரியல் துறை சார்பில் மரம் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.சா.விஸ்வநாதன் மற்றும் விதைக்கலாம் அமைப்பை சார்ந்த ஸ்ரீ மலையப்பன் இருவருக்கும் 'சுற்றுச்சூழல் பாதுகாவலர்'விருதும் வழங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.செல்வம்

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு நிறைவை ஒட்டி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுற்றுச் சூழல் மற்றும் சமூக பணியில் சிறப்பாகச் செயல்பட்ட வர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.

அந்த வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தான் நடத்தி வரும் சர்வசித் அறக்கட்டளை  மூலம் 500 அநாதை உடல்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த மருத்துவர் எஸ்.ராம்தாஸ் அவர்களுக்கு “கொரானா வாரியர் (Corona Warrior) விருதும், பல்கலைக்கழகமகளீரியல் துறை சார்பில் மரம் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.சா.விஸ்வநாதன் மற்றும் விதைக்கலாம் அமைப்பை சார்ந்த ஸ்ரீ மலையப்பன் இருவருக்கும் ‘சுற்றுச்சூழல் பாதுகாவலர்‘ விருதை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்  வழங்கி கெளரவித்தார்.

இது குறித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை மேனாள் பேராசிரியர் சா. விஸ்வநாதன் கூறியதாவது: சமூகப்பணி என்பது தனி நபராலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களாலோ சமூக நலன் கருதியும் மேம்பாடு கருதியும் செய்யப்படும் சேவையாகும்.

நமது நாட்டில் பசி, நோய்கள், கல்வியறிவு இல்லாமை, என உயிர் போகும் விசயங்கள் ஏகப்பட்டவை உள்ளன. அவைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும். நமது மக்கள் அனைவரும் சத்தான உணவு, சுகாதாரம், ஆரோக்கியம், சிறந்த கல்வி பெற்று பல விசயங்களைத் தெரிந்து அறிவில் சிறந்து விளங்கி , நமது நாடும் அறிவியல் வளர்ச்சி பெற்று தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு இணையாக, வல்லரசு நாடாக சிறப்படைய முடியும்.

நாம் நமது பொருளாதாரத்தைப் பெருக்கி ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, வீண் செலவுகளைக் குறைத்து, சிக்கனத்தைக் கடைப்பிடித்து,சுகாதாரம் காத்து,உடல்நலம் காத்து தன்னொழுக்கம் பெற்றவர்களாக, பிறருக்கு உதவி செய்பவர்களாகவும்.

அயராது தினசரி, வாரம் ஒருநாள், மாதம் ஒருநாள், வருடம் ஒரு நாள் எனத் தங்களால்  இயன்ற அளவு, இயன்ற நேரங்களில், நம்மால் முடிந்த அளவு நமது சமுதாயத்திற்காக உழைத்து ,மனித நேயம் போற்றி, பிறருக்கு உதவி செய்து, இயற்கை வளங்களைக் காத்து, இளைய சமுதாயத்திற்கு நல்ல வழி காட்டியாக அனைவரும் திகழ இந்த விருது தூண்டுகோலாக அமையும் என்றார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top