Close
நவம்பர் 22, 2024 2:55 மணி

ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி  சார்பாக 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா

ஈரோடு

ஈரோடு மாநகர் மாவட்ட இந்து முன்னணி  சார்பாக 34 -ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா

இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக இந்து எழுச்சிப் பெருவிழா “பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம்” என்ற தலைப்பில் 34 ஆம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான ஆலோசனை கூட்டம்  மாநில பொதுச்செயலர்  கிஷோர் குமார்  தலைமையில்,  மாநகர் மாவட்ட தலைவர்  பா.ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில்.கோவை கோட்ட செயலாளர் பழனிசாமி மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி முருகேசன் மாவட்ட செயலாளர்கள் வக்கீல் முரளிஇ கார்த்திக், சங்கர், ரமேஷ் மற்றும் துணைத் தலைவர்கள் லோகநாதன், சண்முகம் மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: நிகழாண்டில்  31-08-2022 அன்று விநாயகர் சதுர்த்திக்கு இந்து முன்னணி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களில் ஸ்ரீ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது.ஈரோடு மாநகர் உட்பட்ட பகுதிகளில் 501 இடங்களில் ஸ்ரீ விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது .ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 11 இடங்களில் ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்துவது.

31-08-2022 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு சம்பத் நகர் பிரிவில் கணபதி ஹோமத்துடன் 11 அடி வீர விநாயகர் திருவுருவம் பிரதிஷ்டை செய்வது.  வரும் புதன்கிழமை சம்பத் நகர் பிரிவில் மாலை 6.00 மணிக்கு சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், 01-09-2022 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு மக்கள் மன்றம் என்ற நிகழ்ச்சியும்,  02-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்து பண்பாட்டு தினம், கோமாதா பூஜையும் நடத்துவது .

03-09-2022 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சம்பத் நகரில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காவிரி ஆற்றில் நடத்துவது.01-09-2022 தேதி விஜயமங்கலம் பெருந்துறை காஞ்சிகோயில், அரச்சலூர் உட்பட்ட பகுதிகளில் ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்துவது.

.02-09-2022 தேதி சென்னிமலை வெள்ளோடு கொடுமுடிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற உள்ளது. 04-09-2022 தேதி சித்தோடு பிபி அக்ரஹாரம், மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்ரீ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top