Close
செப்டம்பர் 20, 2024 7:39 காலை

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆவது பாரதி விழா

ஈரோடு

ஈரோட்டில் இன்று பாரதி விழா

ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் 25 -ஆவது பாரதி விழா(டிச.11) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் முதலாம் ஆண்டு “பாரதி விழா 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 11 -ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்றது.

ஒருவருடம் கூட இடைவெளி இல்லாமல் ஆண்டு தோறும் பாரதியின் பிறந்த நாளாம் டிசம்பர் 11 -ஆம் தேதி தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாரதி விழா நடைபெற்று வந்துள்ளது. இதுவரை 24 ஆளுமைகளுக்கு பாரதி விருது வழங்கப்பட்டுள்ளது

வருகிற டிசம்பர் 11 -ஆம் தேதி நடைபெறப் போவது பேரவையின் 25 -ஆவது பாரதி விழா. இந்த ஆண்டின் விருதாளர் 25 -ஆவது ஆளுமை. இடையில் வந்த 2 கொரோனா ஆண்டுகளில்கூட விழா ரத்து செய்யப்படாமல் அரங்கத்தில் மக்களை இடைவெளிவிட்டு அமர வைத்து அதற்குரிய இலக்கணத்துடன் விழா சிறப்பாக நடத்தப்பட்டு, நேரடியாக நடைபெற்ற அவ்விழா நிகழ்வை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலாத உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் பார்க்கும் வண்ணம் யூ டியூப் மற்றும் முகநூல் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

பாரதி விழா என்பது பாரதி, தமிழ். இலக்கியம் என்பதோடு சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்குமான உணர்வையும் அதிர்வையும் மக்களிடையே ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் ஓர் உயிரோட்டமான நிகழ்வாகும்.

2022 டிசம்பர் 11 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஈரோடு URC பள்ளி அரங்கில் நடைபெறும் 25 -ஆவது பாரதி விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பிக்க  வேண்டுமென  ஈரோட்டை தலைமையிடமாகக்கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top