Close
நவம்பர் 22, 2024 12:49 மணி

விவசாய மின் இணைப்பு- வீட்டு மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்ய மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்

புதுக்கோட்டை

09/01/2023 திங்கள்கிழமை முதல் 13/01/2023 வெள்ளிக்கிழமை வரை விவசாய மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

விவசாய மின் இணைப்பு- வீட்டு மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட அனைத்து  கோட்ட மின்வாரிய அலுவலகங்களிலும் நடைபெறுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட அனைத்து  கோட்ட மின்வாரிய அலுவலகங்களிலும்  வருகின்ற 09.01.2023 திங்கள்கிழமை முதல் 13.01.2023 வெள்ளிக்கிழமை வரை விவசாய மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்பிற் கான பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

மாவட்டத்தில் புதுக்கோட்டை அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர். திருமயம் ஆகிய ஊர்களில் உள்ள செயற்பொறி யாளர் அலுவலகங்களில் வருகின்ற 09.01.2023  முதல் 13.01.2023  வரை விவசாய மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் வீட்டு மின் நுகர்வோர்  உரிய ஆவணங்களுடன் அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கொடுத்து சரி பார்த்த பின்பு உரிய கட்டணங்களுடன்  விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மாக கழகம் புதுக்கோட்டை மின் வட்டம் மேற்பார்வை பொறியாளர் கோ. சேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top