Close
நவம்பர் 25, 2024 2:32 காலை

இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

புதுக்கோட்டை

இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளைக்கு தேர்வு செய்யப்பட்ட  புதிய  நிர்வாகிகள்  பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
இந்திய மருத்துவ சங்கத்தின்    புதுக்கோட்டை கிளையின்  2023 -ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள்    பதவி ஏற்பு விழா ஐ.எம்.ஏ  அரங்கத்தில்  நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு  இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநில மூத்த துணைத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
புதிய தலைவராக புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் ராமமூர்த்தி  பணியில் அமர்த்தப்பட்டார். இந்நிகழ்வில் சென்ற ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தலைவர் டாக்டர் சுவாமிநாதனை கிளை உறுப்பினர்கள் டாக்டர் சுப்பையா, டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் சலீம் டாக்டர்  ராஜா உள்ளிட்டவர்கள் பாராட்டினார்கள்.
2023 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளில் தலைவராக டாக்டர் ராமமூர்த்தி, செயலாளராக டாக்டர் முகம்மது சுல்தான், நிதி செயலாளராக டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய  நிர்வாகிகளை மூத்த மருத்துவர்  கோவிந்தராஜன் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்வில் புதிய தலைவர் ராமமூர்த்தி  பேசுகையில்,  தனது பல்வேறு செயல் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் விழாக்குழு சார்பாக சிறப்பாக பணியாற்றியதற்காக மகளிர் பிரிவு செயலாளர் டாக்டர் வெண்ணிலா பெரியசாமி  கௌரவிக்கப்பட்டார்.
டாக்டர் பெரியசாமி தனது புதிய கண்டு பிடிப்பான பெரிய முகக்கவசம்   பற்றி வீடியோ திரை மூலம் விளக்கமளித்து பேசினார்.  நிறைவாக டாக்டர் சாமிநாதன் ஏற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்திய மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளையின் செயலாளர் டாக்டர் முகம்மது சுல்தான் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக  டாக்டர் டி. நவரத்தினசாமி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top