Close
செப்டம்பர் 20, 2024 5:27 காலை

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்லரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பணியேற்பு விழா  நடைபெற்றது.

புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். பொருளாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.கருப்பையா, பொருளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ. கதிரேசன், ரோட்ராக்ட் பிரதிநிதி சுனில் கௌதம்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட ரோட்ராக்ட் தலைவர் ஸ்டீபன் இளங்கோ சிறப்புரை யாற்றினார்.  கல்லூரி ரோட்ராக்ட் சங்க தலைவராக ட்ரூமன் துரை, செயலராக சர்மிளா உட்பட நிர்வாகிகள் புதிதாக பதவியேற்றுக் கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் ஜீவானந்தம்  வரவேற்றார். நிறைவாக ரோட்ராக்ட் செயலாளர் சர்மிளா நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர்கள் திருமலைஅரசன், மர்டோனா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.  நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top