Close
செப்டம்பர் 20, 2024 4:02 காலை

புதுக்கோட்டை அபிராமி மழலையர் தொடக்கப்பள்ளியில் விளையாட்டுவிழா

புதுக்கோட்டை

புதுகை அபிராமி மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா

புதுக்கோட்டை  அபிராமி ஸ்ரீ அபிராமி மழலையர் தொடக்கப் பள்ளியில்விளையாட்டுவிழா  நடைபெற்றது.

இதில், யோகா, ஓட்டப்பந்தயம்,  பிரமிடு,  சிலம்பாட்டம் உள்ளிட்ட .விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில்  குழந்தைகள் மகிழ்ச்சியுடன்  ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது  திறமைகளை வெளிப்படுத்தி னார்கள்.

நிகழ்வில்,  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, ஊராட்சி மன்ற  தலைவர் ஏ.வி.எம். பாபு , மண்டல செயலாளர்  விஆர்.வெங்கடாசலம் , பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க தலைவர்  வேலுசாமி,

அரசு சிறப்பு  வழக்கறிஞர் எம். செந்தில்குமார், ரோட்டரி மண்டல செயலாளர்{ திட்டம் }  ஜி. எஸ். எம். சிவாஜி,    அபிராமி       பள்ளியின் ஆலோசகர்   பேராசிரியர் கருப்பையா பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள் கல்வியாளர்கள் ஆசிரியைகள்   மாணவ, மாணவிகள்.பெற்றோர்கள்   உள்ளிட்டோர்   கலந்து  கொண்டனர்.  விழா  ஏற்பாடுகளை அபிராமி ஸ்ரீ அபிராமி பள்ளி ஆசிரியைகள்செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top