புதுகை சாந்தநாதசுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற சிவராத்திரி பிரதோஷ விழாவை யொட்டி, அருள்மிகு வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் அபிஷேகம் பல்வேறு சிவசாரியார்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சிவராத்திரி விழாவில் பங்கேற்ற சிவாச்சாரியார்கள்உற்சவர் சாந்தநாதசுவாமி சுவாமிக்கு ங்கள வாத்தியம் முழங்க பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகமும் நான்கு காலபூஜையும் நடந்தது.பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர்.
புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் வருகைதந்து வழிபட்டனர். நடைபெற்றது. அரிமளம் ரவி சிவாச்சாரியார், பிரதோஷ வழிபாட்டு அமைப்பாளர் மல்லிகாவெங்கட்ராமன், திருக்கோவில் நிர்வாகிகள் கோயில் ஊழியர்கள் உட்பட பலர் கவனித்தனர்.