Close
செப்டம்பர் 20, 2024 5:38 காலை

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் முதலாம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா

புதுக்கோட்டை  தாஜ்ஹாலில் அறம் லயன்ஸ் சங்க   முதலாம் ஆண்டு  புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது.

 சங்கத் தலைவர்  ஏ . அரவிந்த் தலைமை  வகித்தார்.  மாவட்ட ஆளுநர் ஏ ஆர் கே . சேது சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டு 2023-24  வருடத்தின்  நிர்வாகிகளில்  ஏ . அரவிந்த்  தலைவராகவும்,  எம்.பிரபு செயலாளராகவும்  ஜி சந்திரசேகர், பொருளாளராகவும் பணியமர்த்தி வாழ்த்தினார்.

சிறந்த சமூக சேவை விருதாளர்கள்  பி.எஸ்.பக்கிரிசாமி, மருத்துவர் எஸ் ராமமூர்த்தி, மரம் ராஜா  உள்ளிட்ட  6 பேருக்கு விருதும், புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு  சீருடைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

புதுக்கோட்டை
சிறந்த சேவைக்கான விருது பெற்ற தெய்வீக திருப்பணி மருத்துவர் ராமமூர்த்தி

இவ்விழாவில் லயன்ஸ் உறுப்பினர்கள்   பக்தவச்சலம்,  வீரபாண்டி, ராஜராஜன், சக்திவேல், சத்தியமூர்த்தி,  தர்மா, சசிகுமார், வழக்கறிஞர் பர்வின்பானு, அபிராமி, தெட்சிணாமூர்த்தி, ராமசாமி, வெங்கடேசன், முத்துக்குமார் பாரி, பாண்டிவேல், டாக்டர் ராமமூர்த்தி, டாக்டர் ராம்பிரகாஷ் மற்றும்   பல்வேறு மாவட்டங்களின்       லயன்ஸ் சங்க நிர்வாகிகள்      கல்வியாளர்கள் ,சமூக அமைப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்  செயலாளர்  எம்.பிரபு நன்றிகூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top