தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சராலா் 2021-2022 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 30 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது முக்கிய அறிவிப்பாகும்.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா சம்பந்தமான தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலா ஏற்பாட்டாளர், உள்ளூர்-வெளியூர் சுற்றுலா வாகன ஏற்பாட்டாளர், பிரதான சுற்றுலா ஏற்பாட்டாளர், பயண, விமான பங்களிப்பாளர், தங்கும் விடுதி, உணவகம், வழிகாட்டி சாகச சுற்றுலா நிகழ்த்தியவர், கூட்டம் மற்றும் மாநாடு அமைப்பாளர், சமூக ஊடக தாக்கம் ஏற்படுத்தியவர்,
தமிழக சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர கருத்து, சுற்றுலா, விருந்தோம்பல், சுற்றுலா தொடர்பான கல்வி நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படு பவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உலக சுற்றுலா தினமான 27.09.2023 அன்று விருது வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் விருதுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக 15.08.2023 ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி வைக்கலாம்.
மேலும், இதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள புதுக்கோட்டை சுற்றுலா அலுவலரை (மு.கூ.பொ), அலைபேசி 7397715682 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.