புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்காக தமிழ\க அரசால் வழங்கப்பட்ட 17 புதிய வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களிடம் ஒப்படைக்கப் பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை யில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர் கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக் கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பணிகளை திறம் பட கண்காணிக்க ஏதுவாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் 02.08.2023 அன்று சென்னையில் வழங்கினார்.
அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பயன்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய வாகனத்தினை, அலுவலக வாகன ஓட்டுநர்களிடம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா (04.08.2023) ஒப்படைத்தார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக பயன்பாட்டிற்காக 16 புதிய வாகனங்களையும் ஓட்டுநர் களிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.