Close
நவம்பர் 22, 2024 1:28 மணி

திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

புதுக்கோட்டை

சிறப்பு அலங்காரத்தில் திருவப்பூர் மாரியம்மன்

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு ஆவணி மாத முதலாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் பிரசித்தி  பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆவணி மாத முதலாம்ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு முத்துமாரி யம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் சந்தனக்காப்பு மலர் அலங்காரம் தீபாராதனை நடந்தது.

அதிகாலையிலிருந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் வருகை தந்து வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top