Close
நவம்பர் 22, 2024 12:17 காலை

அக் 28 ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக மமக அறிவிப்பு

ஈரோடு

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா

வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் 28 -ஆம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா ஈரோட்டில் தெரிவித்தார்

.
ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த ஜூலை 9 -ஆம் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 24 -ஆம் தேதி வாழ்நாள் சிறைவாசிகள் 49 பேரை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற கோப்புகளை ஆளுநர் கையெழுத்துக்காக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கோப்பில் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் கையெழுத்து இடாமல் ஆளுநர் தாமதம் செய்து வருகிறார்.
இதனைக் கண்டித்தும் அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தியும் வரும் 28 -ஆம் தேதி சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் மமக ஈடுபடும்.

10 பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவிடம் பலமுறை கேட்டும், உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தும் வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு முந்தைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் வாழ்நாள் சரி வாசிகளை விடுதலை செய்ய கூறி ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பரிந்துரை செய்து ஆளுநருக்கு கோப்புகளை அனுப்பிய பிறகும் இந்த விவகாரத்தில் அதிமுக நாடகமாடி வருகிறது.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதி காரணமாக பாஜக ஆட்சியை “இண்டியா ” கூட்டணி ஆதரவுடன் அகற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந் தால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்ற காரணத்திற்காகவே பாஜக கூட்டணியில் இருந்து விலகுவ தாக அதிமுக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு ஒரு அரசியல் நாடகம் ஆகும்.

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் என் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கும் கருத்து சரியான நிலைபாட்டை காட்டுகிறது. பாலஸ்தீனத்தின் 98 சதவீதப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்ட நிலையில், இதற்கு முந்தைய மத்திய அரசுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவே குரல் எழுப்பி வந்தன.

ஆனால் தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த ஆதரவை விலக்கிக் கொண்டு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். பாலஸ்தீனம் அரபுகளுக்கு தான் சொந்தம் என்று காந்தியடிகளே கூறி அவர்களுக்கு ஆதரவான நிலைபாட்டை இந்தியா எடுத்திருந்த நிலையில் அதிலிருந்து பிரதமர் மோடி பிறழ்வது சரியானது அல்ல.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற இந்தியா கூட்டணியையே ஆதரிப்பது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதிமுக கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்.

அதிமுகவுக்கு தேசிய பார்வை இல்லை. சிறுபான்மையினர் விவகாரத்தில் தெளிவான முடிவு எடுக்காமல் உள்ளதால் அக்கட்சியை சிறுபான்மையினர் ஆதரிக்க மாட்டார்கள் என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

# செய்தி- மு.ப. நாராயணசுவாமி #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top