Close
நவம்பர் 22, 2024 12:22 காலை

கோபியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த குடும்பத் திருவிழா

ஈரோடு

கோபியில் கலைஞர் நூற்றாண்டு விழாவி குடும்த்திரு விழா நலத்திட்ட உதவி கள் வழங்கப் பட்டது

கோபியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடந்த குடும்பத் திருவிழாவில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது.

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை இந்தாண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜானகி கோபால் ஏற்பாட்டில் திமுக குடும்பத் திருவிழா மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஈரோடு

நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த கலைக் குழுவினரின் பாரம்பரிய இசை, பறையாட்டம், ஒயிலாட் டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் குடும்பத்திருவிழா நடை பெற்றது.

அதைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த மாவட்ட முன்னாள் மக ளிரணி அமைப்பாளர் ஜானகி கோபால் தலைமையில் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி,மாநில விவசாய அணி இணைச் செயலாளர் தர்மலிங்கம்,

முன்னாள் இலக்கிய அணி அமைப்பாளர் கும ணன் ஆகியோர் முன்னிலையில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. விழாவில் நம்பியூர் பேரூர் கழக திமுக செயலாளர் ஆனந்தகுமார்.அளுக்குளி பாலு, முன்னாள் கலை இலக்கிய பகுத்தறிவாளர் அணி நிர்வாகி தென்றல் ரமேஷ்.

ஈரோடு

ஈரோடு வடக்கு மாவட்ட தன்னார்வலர் வெற்றி, முன்னாள் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் நம்பியூர் வெங்கடேஷ், மாவட்ட முன்னாள் மாவட்ட மாணவரணி நிர்வாகிபிரபு மற்றும் கோபி. நம்பியூர், அளுக் குளி, மொடச்சூர், வடுக பாளையம், கொளப்பலூர், கள்ளிப்பட்டி, காசிபாளை யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top