Close
நவம்பர் 24, 2024 10:35 மணி

உவர்நீரில் (கொடுவா-Sea bass) மீன் வளர்ப்பிற்கு மானியம் பெற அழைப்பு

தஞ்சாவூர்

மீன் வளர்க்க மானி.ம்

உவர்நீரில் (கொடுவா-Sea bass) மீன் வளர்ப்பிற்கு மானியம் வழங்கும் திட்டம்குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்  தெரி்வித்துள்ளார்.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் (கொடுவா-Sea bass) மீன் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக கொடுவா மீன்குளங்கள் அமைத்திட விரும்புவோர்கள் பயன்பெறும் வகையில் புதிய மீன் குளங்கள் அமைக்கவும், அதற்கான உள்ளீட்டு செலவீனங்களுக்கு மானியம் வழங்கிடும் திட்டம் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் புதிய மீன் குளம் ஒருஹெக்டேர் அளவில் அமைத்திடசெலவினம் ரூ.8. இலட்சம் எனவும் உள்ளீட்டு செலவீனம் ரூ. 6. இலட்சம் எனவும் நிர்ணயித்து அதனில் பொதுப் பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.5.60 இலட்சம் வழங்கப்பட உள்ளது.

மேலும் இதே போன்று உயிர் கூழ்ம திரள் (Biofloc) குளங்களில் இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் வழங்கும் திட்டத்திற்கு மகளிர் பிரிவின் கீழ் (60%) மானியம் 3 எண்ணம்  இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி 01 அலகிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.18. இலட்சத்தில் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.10.80 இலட்சம் வழங்கப்படும்.

மேலும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுதிட்டம் 2021-22-ன் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதியகுளங்கள் கட்டுதல் மற்றும் உள்ளீட்டு செலவீனங்களுக்கான மானியம் பொதுப் பிரிவிற்கு 6 ஹெக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.  இத்திட்டத்தின்கீழ் புதிய இறால் வளர்ப்பு குளம் அமைப் பதற்கும் மற்றும் உள்ளீட்டு செலவீனத்திற்கான மொத்த செலவினம் ரூ.14 இலட்சத்தில் 40% மானியமாக  ரூ.5.60 இலட்சம் மானியமாக  வழங்கப்படும்.

மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தஞ்சாவூர், எண்.873 / 4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது  04362-235389என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு  வரும் 20.12.2023  தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top